தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி ஜூலை 17- தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர் பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘தொகுதி மறுவரையறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை, வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோ தாவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றால் அதுதொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு வசதியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்ட வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதில் உள்ள அம்சங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

மேலும், மக்களவையில் உள்ள இடங்களை 50 சதவீதம் அதிகரிக்கப் போவதாகவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தென் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

எனவே, பிரச்சினைக்குரிய மசோதாக்கள், தொகுதி மறுவரை யறை மசோதா உள்ளிட்ட விசயங் களை விரிவாக கலந்து ஆலோசிக்க வசதியாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கார்கே தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *