வர்த்தகப் போரை முறியடித்த சீனா: டிரம்ப் முன்னிலையில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் பெய்ஜிங்கில் குவிந்தன!

பெய்ஜிங், மே 18- அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதா ரத் தடைகளையும் வர்த்தகப் போரையும் முறியடித்து சீனா மாபெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதிபர் டிரம்பின் இந்த அதிகாரப்பூர்வ சீனப் பயணத்தில் ஆப்பிள், டெஸ்லா, என்விடியா, பிளாக்ராக், போயிங் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலகை ஆளும் 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) பங்கேற்றுள்ளனர்.

டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தில், சீனாவைத் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்க வேண்டும் என்ற நோக்கில், 145 சதவீதம் வரை கடுமையான வரிகளை விதித்து வர்த்தகப் போரைத் துவங்கினார். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி, அமெரிக் காவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இருப்பினும், இந்தத் தடைகளை ஒரு சவாலாக எதிர்கொண்ட சீனா, தொழில்நுட்பத் துறையில் தற்சார்பை அடைந்ததோடு, தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளையும் பலமடங்கு விரிவுபடுத்தியது. இதன் விளைவாக, அமெரிக் காவின் வர்த்தகப் போர் சீனாவை விட அமெரிக்கப் பொருளாதாரத்தையே அதி கம் பாதிக்கத் துவங்கியது.

அமெரிக்க அரசின் தடைகளையும் மீறி, என்விடியா நிறுவனத்தின் சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் வர்த்தகப் போரின் உச்சக்கட்டத்திலேயே இருமுறை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்ளிட்ட பிற தொழிலதிபர்களும் சீனச் சந்தையைத் தங்களால் தவிர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த அழுத்தங்களின் காரண மாகவே, தற்போது அதிபர் டிரம்ப் தனது சொந்த விமானத்திலேயே இந்த முதலாளிகளைச் சீனாவிற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் குடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தொழிலதி பர்கள் தாங்கள் “சீனச் சந்தைக்குப் பெரும் மதிப் பளிப்பதாகவும்”, அங்குத் தங்களது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த விரும் புவதாகவும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அதிபர் ஜி ஜின்பிங்:

“இரு தரப்பிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டு ஒத்துழைப்புகளைச் சீனா எப்போதும் வர வேற்கிறது. அமெரிக்க நிறுவனங்களுக்குச் சீனாவில் மிகப்பரந்த வணிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.” என்று உறுதியளித்தார்.

2017-ல் டிரம்ப் சீனா வந்தபோது வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த சீனா, இன்று தடைகளைத் தவிடுபொடியாக்கி, அமெரிக்காவையே தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்குப் பொருளாதார வலிமை பெற்றுத் திகழ்கிறது என்பதை இந்தச் சந்திப்பு நிரூபித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *