கடந்த ஞாயிறு அன்று (28.6.2026) குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்துவிட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் மலைக்கோட்டை தொடர் வண்டியில் தமிழர் தலைவர் அவர்கள் பயணிக்கவிருந்த நிலையில், அதே தொடர் வண்டியில் பயணித்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சீ.ரமேஷ் அவர்கள், ஆசிரியர் அவர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியை ஆண்டுதோறும் இடைவிடாது நடத்துவதும், அறநிலையத் துறை கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாகப் பணியமர்த்துவதும் அவசியம் என்று அமைச்சரிடம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தினார்.
