தமிழர் தலைவருடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சீ. ரமேஷ் திடீர் சந்திப்பு!

கடந்த  ஞாயிறு அன்று (28.6.2026) குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்துவிட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் மலைக்கோட்டை தொடர் வண்டியில் தமிழர் தலைவர் அவர்கள் பயணிக்கவிருந்த நிலையில், அதே தொடர் வண்டியில் பயணித்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சீ.ரமேஷ் அவர்கள், ஆசிரியர் அவர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப்  பள்ளியை ஆண்டுதோறும் இடைவிடாது நடத்துவதும், அறநிலையத் துறை கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாகப் பணியமர்த்துவதும் அவசியம் என்று அமைச்சரிடம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *