அயோத்தி ராமன் கோவில் காணிக்கை திருட்டு வழக்கில் கைதான 8 பேருக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் அயோத்தி வழக்குரைஞர்கள் சங்கம் தீர்மானம்

2 Min Read

அயோத்தி, ஜூன் 30- ‘அயோத்தி ராமன் கோவில் நன்கொடைகளை திருடியதாக கைதான எட்டு பேருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்குரைஞரும் ஆஜராகக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, அயோத்தி வழக்குரைஞர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நன்கொடைகளில் முறைகேடு

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச் சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டு இங்குள்ள அயோத்தியில் கட்டப் பட்டுள்ள மாபெரும் ராமன் கோவில், 2024 ஜனவரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. கோவிலை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகிக்கிறது.

கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குற்றஞ்சாட்டின. விவகாரம் பெரிதானதை அடுத்து, மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. விசாரணையில், காணிக்கைகள் எண்ணும் போதும், அந்த பணத்தை வங்கிக்கு பரிவர்த்தனை செய்த போதும் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. அந்த வகையில், கோவில் அறக்கட்டளை பொதுச் செயலராக இருந்த சம்பத் ராயின் ஓட்டுநர் ராம்சங்கர் யாதவ், காணிக்கை எண்ணும் பணிக்கான மூத்த முகவர் அனுகல்ப் மிஸ்ரா, அவரது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ரா உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அனுகல்ப் மிஸ்ரா சில ஆண்டுகளாக சொத்துகள் வாங்கி குவித்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரது வீடு உட்பட கைதான எட்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்திய காவல்துறையினர் 80 லட்சம் ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், பக்தர்களின் நம்பிக்கையுடன் விளையாடி, கோவில் பணத்தை திருடிய நபர்களுக்கு அயோத்தி வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என, நேற்று (20.6.2026) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அயோத்தி வழக்குரைஞர்கள் சங்க தலைவர் காளிகா பிரசாத் மிஸ்ரா கூறுகையில், ”இந்த முறைகேடில் கைதானவர்களுக்கு ஆதரவாக, சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம். மீறினால், சம்பந்தப்பட்ட வழக்குரை ஞருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையே, இந்த விவ காரம் தொடர்பாக, சி.பி.அய்., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது.

3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை

அயோத்தி ராமன் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை களை எண்ணும் பணியில் ஈடுபட்ட சிலரை நீக்கும்படி, எஸ்.பி.அய்., வங்கி மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அறக்கட்டளையில் இருந்த சிலர், இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களை காப்பாற்றியதாக எஸ்.பி.அய்., வங்கி தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. அதே போல், காணிக்கை எண்ணும் பணியை மேற் பார்வையிடும் பொறுப்பில் இருந்த இரு எஸ்.பி.அய்., வங்கி ஊழியர் களும் விசாரணை வளையத்திற் குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *