சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 முதல் 2031ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம். 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை வசதி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக கார்பஸ் நிதி மூலம் ரூ.15 லட்சம் வரை உதவி கிடைத்தால், மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.
இந்த திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட் டோரும் திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். குறைந்த ஊதியம் பெறுவோருக்கான பிரீமியத்தை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
