சென்னை, மே 23 ‘கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை’ என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கருநாடக அரசு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழ் நாடு அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று கருநாடக துணை முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்க தக்கதல்ல.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
மேகதாது அணை கட்ட புதிய விரிவான திட்டம் ஒன்றிய அரசிடம் வழங்கப்படும் என கருநாடக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சியை கருநாடக மாநிலம் உடனடியாகக் கைவிட வேண்டும். மேகதாது அணைத் திடடத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
