நமது நாட்டில் திராவிடர் கழகமாக மாறியுள்ள சுயமரியாதை இயக்கம் தவிர்த்த மற்றக் கட்சிகள் பெரும்பாலும் பணம், விளம்பரம், ஆதிக்கம், அதிகாரம், சூழ்ச்சி, தந்திரம் இவைகளின் காரணமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றனவேயல்லாது, ஒன்றாயினும் நமது கழகத்தைப் போல் கொள்கைகளின் காரணமாகவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளதாக திடமாகச் சொல்ல முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
