கல்பாக்கம், கோவை சம்பவம் த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

1 Min Read

சென்னை, ஜூன் 25-  “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத்தானே சொன்னார்” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கல்பாக்கம் அருகே சமூக விரோதிகளால் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும், கோவை – சுகுணாபுரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட செய்தியும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்காமல், அனைத்துக்கும் திமுகவின் மீது பழிபோடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது தவெக அரசு.

இத்தனை ஆண்டுகளாக திரைப்படங்களில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் பெண்களுக்கு எதிராகக் கலாச்சார வகுப்பெடுத்தவர்களும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத் தானே சொன்னார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *