நைஜீரியாவில் 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை

அபுஜா, ஜூன் 24- ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச் நிகழ்வுகளால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல் வேறு கும்பல்களின் நடமாட்டம் இங்குள்ள கிராமப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள பொக்கோஸ் நகரின் காவெல் கிராமத் தில், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் திடீரென ஊடுருவிய ஆயுதமேந்திய அடை யாளம் தெரியாத கும்பல் ஒன்று, கண்மூடித்தன மாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறிய டித்தபடி ஓடிய அப் பாவி மக்கள் மீது அந்த பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்.

இந்த பயங்கர தாக் குதலில் பெண்கள் உள்பட 20 பேர் நிகழ்வூ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல றிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அக்கும்பலுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடு பட்டதைத் தொடர்ந்து அவர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *