பெரியார் விடுக்கும் வினா! (1998)

0 Min Read

நாங்கள் கட்சி மாறுகிறோம் என்று சொல்வது போக்கடாத்தனம். அந்தக் கட்சியிலிருந்து ஓட்டு வாங்கிவிட்டு இந்தக் கட்சிக்கு வருகிறவன், ஒரு கட்சியில் இருந்து பலன் அனுபவித்துவிட்டு வேறு கட்சிக்குப் போகிறவன், ஒரு கட்சியில் நின்று ஜெயித்து விட்டுப் பதவி கொடுக்கிறான் என்பதற்காக இன்னொரு கட்சிக்குப் போகிறவன் – கட்சி மாறுகிறவன் ஆவான் இல்லையா? எதையும், யாரையும் எங்கள் கொள்கை, இலட்சியத்தை வைத்துக் கொண்டுதான் ஆதரித்தோம்; ஆதரிக்கின்றோம். நாங்கள் எங்கள் இயக்கத்தையோ, கொள்கையையோ, இலட்சியத்தையோ விட்டுவிட்டு என்றைக்காவது தடம் மாறிப் போனது உண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *