3 வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read

சென்னை, ஜூன் 16– கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக் குழந்தை உயிரிழந்தது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட் டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

தொடர்கதை

வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த ‘சோபா மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டில் அன்றாடம் தொடர் கதை ஆவது கண்டிக்கத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக் கேட்பதற்கான கருவியாக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் – பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.

பெண் காவலருக்கே…?

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது – ஆலந்தூரில் அவரது கட்சிப் பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது – சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில நாள்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை.

இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. அடுத்த கட்சி ஆட்களை வாங்க செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.

வீதியில் இறங்கிப் போராட்டம்

தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல – மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப் பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *