பாலிடெக்னிக் மாணவர்கள் பழைய நிலுவையில் உள்ள (அரியர்) பாடங்களை எழுதச் சிறப்பு வாய்ப்பு

சென்னை, ஜூன் 13- சென்னை பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள், பழைய நிலுவையில் உள்ள (அரியர்) பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உயர்கல்வித் துறை செயலர் அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணை: பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்பை முடித்து தேர்வெழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் முடித்து, தேர்ச்சிப் பெறாமல் நிலுவை பாடங்களை (அரியர்ஸ்) வைத்துள்ள மாணவர்கள், தேர்வில் கலந்து கொள்ள 2015, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2025ஆம் ஆண்டுகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டும், பருவ காலத் தேர்வுகளில் (செமஸ்டர்) தேர்ச்சி பெறாமல் நிலுவையில் வைத்துள்ள மாணவர்கள், வரும் பருவ காலத் தேர்வுகளில் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கைகள் வைத்து வருவதாகவும், அம்மாணவர்களின் நலன் கருதி, 2026 அக்டோபர், 2027 ஏப்ரல் பருவ காலத் தேர்வுகளின் போது மட்டும், நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு மூலம் தேர்வெழுதவும், உரிய தேர்வுக் கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிடுமாறும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஏற்று, பாலிடெக்னிக் பட்டயப் (டிப்ளமா) படிப்பை முடித்து பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் உள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் அக்டோபர் மற்றும் 2027 ஏப்ரல் பருவகாலத் தேர்வுகளின்போது மட்டும் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. அம்மாண வர்களின் சிறப்பு வாய்ப்புக்காக பதிவு கட்டணமாக ரூ.750-ம் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக ரூ.40ம், விண்ணப்ப கட்டணமாக ரூ.20ம், ஒரு பாடத்துக்கு தேர்வு கட்டணமாக
ரூ.65-ம் நிர்ணயித்து அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *