இயந்திரக் கோளாறு காரணமாக ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்திய சரக்குக் கப்பல் 14 மாலுமிகள் பத்திரமாக மீட்பு

1 Min Read

துபாய், ஜூன் 15– ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் காரணமாக மத்தியகிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஹார்மூஸ் நீரிணை யில் கப்பல் போக்கு வரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே செல்லும் கப்பல்கள் மீது அமெ ரிக்கா, ஈரான் நாடுகள் தாக்குதல் நடத்தி வரு கின்றன. அதன்ஒரு பகுதியாக கடந்த சில நாள்களுக்கு முன் ஓமன் கடலோர பகுதியில் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்திய கப்பலில் இருந்த 14 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் தன் எக்ஸ் தளத்தில், “இந்தியக் கொடியுடன் கூடிய எம்எஸ்வி விராட் 1 என்ற சரக்குக் கப்பல் 14 இந்தியர்களுடன் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாக ஓமன் கடல்பகுதியில் மூழ்கத் தொடங்கியது. இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கும், இந்திய கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் மூழ்குவதை அறிந்த அமெரிக்கக் கடற்படை விமானமும், கப்பலில் இருந்தவர்களை மீட்க மீட்புப் படகுகளை அனுப்பியது. இந்திய கடற்படையும், அமெரிக்கப் படகுகளும் இணைந்து எம்எஸ்வி விராட் 1 கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டனர்” என தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *