இந்நாள் – அந்நாள்

2 Min Read

கல்வி வள்ளல் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் நினைவு நாள் இன்று  (15.6.1948)

கல்வி வள்ளல் ராஜா சர். அண்ணாமலை செட்டியார்  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார். தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஓர் உந்துதலாக அமைந்தது சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

இந்நாள் - அந்நாள்

l”நம்நாடு”  நாளிதழின் ஆசிரியராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பு ஏற்ற நாள் இன்று (15-06-1952)

l திருச்சியில் மாணவர் பயிற்சி முகாமை (20 நாள் நடைப்பெற்றது) துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரையாற்றிய நாள் இன்று (15-06-1964).

l மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் நடைபெற இருந்த கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியை ஒத்திவைத்து தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்ட நாள் இன்று (15-06-1972).

l தந்தை பெரியார் அவர்களின் “பொன்மொழிகள்” என்ற நூலுக்கு இருந்த தடை டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தடை நீக்கப்பட்ட நாள் இன்று (15-06-1979).

l தமிழ் உணர்வாளரும், பெரியார் சிந்தனையாளரும், இனமானத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான  மணிவண்ணன்  நினைவு நாள் இன்று (15-06-2013).

l மின்னல் ஒரு மின்சாரம் என்பதை அறிவியலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள் நிரூபித்த நாள் இன்று (15-06-1752).

l புகழ் பெற்ற பிரெஞ்ச் மருத்துவரான சான் பாப்டிஸ்ட் டெனிஸ் (DR. JEAN BAPTISTE DENYS) முதன்முதலில் மனிதனுக்கு ரத்தமாற்றத்தை செயல்படுத்திய நாள் இன்று (15-06-1667)

இவர் பதினான்காம் லூயி மன்னரின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தவர். இவர் உலகின் முதலாவது மனித ரத்த மாற்றத்தை செயல்படுத்தினார்.

ஒரு ஆட்டின் 12 அவுன்ஸ் ரத்தத்தைச் சோர்ந்து போயிருந்த 15 வயது கொண்ட ஒரு சிறுவனின் உடலில் செலுத்தினார்.

அதன்பின்னர் அச்சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து சரியாகியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *