பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் (6.7.1870)
பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பிறந்த நாள் இன்று.
தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் பரிதிமாற் கலைஞரும் ஒருவர் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமைக்குச் சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
ரூபாவதி, கலாவதி, மான விஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, மதிவாணன், நாடகவியல், தமிழ் வியாசங்கள், தமிழ் மொழியின் வரலாறு, சித்திரக்கவி விளக்கம் ஆகிய பல நூல்களை பரிதிமாற் கலைஞர் எழுதியுள்ளார்.
