மக்கள் தூதுவர்களாக மாணவர்கள் நியமனம்!

1 Min Read

சென்னை, ஜூன் 13– சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மக்கள் தூதுவர்களாக மாணவர்கள் நியமிக்கப் பட்டு, அவர்கள் பயணி களிடையே பாதுகாப் பான பயணம் குறித்த விழிப் புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் மக்களிடையே மெட்ரோவில் பாதுகாப் பான பயணத்துக்கான பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.

அதனையடுத்து தேசிய மாணவர் படையினர் மற்றும் தன்னார்வலர்களை மக்கள் தூதுவர்களாகவும் மெட்ரோ நியமித்துள்ளது.

அவர்கள் மூலம் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் தூதுவர்களான தேசிய மாணவர் படைப் பிரிவினர் 25-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், மெட்ரோ விதிமுறைகளை விளக்கியும் 12.6.2026 அன்று பிரசாரம் மேற்கொண் டனர்.

அப்போது மெட்ரோ ரயிலில் பயணிகள் இறங்குவதற்கு வழிவிட்டு ஏறிடவும், பயணத்தின் போது பிறருக்கு சிரமத்தை தராத வகையில் கைப்பேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளையும் மாணவர்கள் விளக்கினர். தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *