சென்னை, ஜூன் 28 நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவாக வேட் பாளர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
பொதுவாக, ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடனும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வெற்றி பெற றவர்களின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது வழக்கம்.
ஆனால், கடந்த காலங்களில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது.
2011 தேர்தல்: 12 தேர்தல் வழக்குகள், 2016 தேர்தல்: 13 தேர்தல் வழக்குகள் இப்படியொரு சூழலில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து, 55 வழக்குகள் வரை பதிவாகி சாதனை படைத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த 55 தேர்தல் வழக்குகளுக்கான ஆவணங்கள் தற்போது தீவிர ஆய்வில் உள்ளன. இந்த முதற்கட்ட பரிசீலனை மற்றும் ஆவண சரிபார்ப்பு பணிகள் நிறை வடைந்தவுடன், அனைத்து வழக்குகளும் விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
