பல ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்!

1 Min Read

பாங்காக், ஜூன் 13- தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47), கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (12.6.2026) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இத்தகவலை தாய்லாந்து அரசு அரண்மனை அதிகா ரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்து இளவரசி

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிதியாபா பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காகத் தனது வளர்ப்பு நாய்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிர்பாராதவிதமாகத் திடீர் மாரடைப்பு  ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். எனினும், அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாகப் பெருங்குடலில் அழற்சி (வீக்கம்) ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காலமானார்

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கோமா நிலையிலேயே இருந்த இளவரசி பஜ்ரகிதியாபா, நேற்று  தனது 47ஆவது வயதில் உயிர் இழந்தார்.

தாய்லாந்தின் தற்போதைய 73 வயது மன்னர் மற்றும் அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலி ஆகியோரின் மூத்த மகள். தாய்லாந்தின் மறைந்த புகழ்பெற்ற மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் மற்றும் மறைந்த முன்னாள் ராணி சிரிகிட் ஆகியோரின் முதல் பேத்தி ஆவார்.

மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த இவர், சட்டத்துறையில் பட்டம் பெற்று, அய்க்கிய நாடுகள் சபையின் பல்வேறு தூதரகப் பொறுப்புகளிலும், தாய்லாந்தின் முக்கிய அரசுப் பதவிகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி பஜ்ரகிதியாபாவின் மறைவு தாய்லாந்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்குப் பல்வேறு நாட்டுத் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *