வெளிநாட்டு நிதியுதவி சட்டத்திருத்தம்: ஜூன் 28-இல் நாடு தழுவிய உண்ணாநிலைப் போராட்டம் தி.மு.க. எம்.பி. வில்சன் அறிவிப்பு!

1 Min Read

சென்னை, ஏப்.27 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளி நாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA Amendment) திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திருத்தம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் பிரம்மாண்ட இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆச்சரியமூட்டும் வகையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மதத் தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிறுபான் மையின சமூகப் பிரதிநிதிகள் உள் ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

கருத்தரங்கில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகளைப் பட்டியலிட்டார்:

“இந்த மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் அபாயம் கொண்டது. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGOs) சுயாட்சி மற்றும் செயல்பாடுகளைக் கடுமை யாக முடக்கும்.”  தன்னார்வ அமைப்புகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்:

ஏழை, எளிய மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும். பழங்குடியின மக்க ளுக்கான சமூக நலத் திட்டங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.

அடித்தட்டு மக்களுக்கான அத்தி யாவசிய உதவிகள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படும்.

இந்த கருத்தரங்கின் முடிவில், மக்கள் நலனைப் பாதிக்கும் இந்தச் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி, ஜூன் 28-ஆம் தேதி இந்தியா முழுவதும் உண் ணாவிரதப் போராட்டம் நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *