இமயமலைப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காத்மாண்டு,ஜூன் 12- இந்து குஷ் இமயமலைப் பகுதியில் இந்த ஆண்டு பருவ மழை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், அங்கு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இருவேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிராந்தியமானது இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்பட 8 நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இங்கு வழக்கத்தை விட வெயில் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவினாலும், திடீரென குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கும் அதிபயங்கர மழையால் கடுமையான நிலச்சரிவுகளும், திடீர் பெருவெள்ளமும் ஏற்படும் என்று ‘இசிமோட்’ பருவநிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என் பதால் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *