எபோலா தொற்று உயிரிழப்பு 200அய் கடந்தது!

காங்கோ, ஜூன் 23- உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-அய் கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யம் தெரிவித்துள்ளது.

இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் காங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரியிலேயே பதிவாகியுள்ளன. மேலும், இத் தொற்று அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவி, அங்கு 19 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவா் உயிரிழந்துள்ளனா்.

இத்தொற்று பாதிப்பு கடந்த வாரத்தைவிட தற்போது 38 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதுவரை 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய பாதிப்புகளுடன் ஒப்பிடு கையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய அலையாக இது பதி வாகியுள்ளது.

தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பு ‘பண்டிபுக்யோ’ எனும் அரிய வகையால் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருந்துகளோ இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல் தொடா் உள்நாட்டு மோதல்கள், அடா்ந்த காடுகள் நிறைந்த புவியியல் அமைப்பு காரணமாக, நோய் தடுப்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இச்சூழலை எதிா்கொள்ளப் போதிய நிதியும், மருத்துவப் பணியாளா்களும் இல்லாதது நெருக் கடியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த எபோலா ஒழிப்புப் பணி களுக்காக உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட 90 கோடி டாலா் நிதியில், இதுவரை 9 கோடி டாலா் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *