ஜப்பானை அடுத்து சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி 10 லட்சம் பேர் வெளியேற்றம்

2 Min Read

ஷாங்காய், ஆக.10- ஜப்பானில், கடந்த ஜூலை 26ஆம் தேதி பருவகால காற்றழுத்தம் ஒன்று உருவாகி, பின்னர் ஜூலை 28ஆம் தேதி அது வலுவான சூறாவளியாக உருவானது. அதற்கு டால்பின் சூறாவளி என பெயரிடப்பட்டது.

இந்த டால்பின் சூறாவளி, ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான ஒகினவாவை கடுமையாக தாக்கியது. இதனால், 14 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கட்டடங்களில் வசிப் பவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இத னால், அதில் வசித்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூறாவளி புயலால், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒகினவா தீவு, ஆமமி தீவு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சூறாவளியால் அதிகம் தாக்கப்பட கூடிய துறைமுகங்கள் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங் களும் பாதுகாப்பை முன் னிட்டு மூடப்பட்டன.

சூறாவளியின்போது, பலத்த காற்று வீசியதில், வயது முதிர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால், மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது.

எனினும், சில சமயங் களில் மணிக்கு 216 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது என ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்தது. இந்த சூறாவளி, சீனாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஜப்பானை தாக்கி விட்டு நகர்ந்து சென்ற டால்பின் சூறாவளி சீனாவை நெருங்கியது. அந்நாட்டின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (9.8.2026) மாலை சூறாவளி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, யூஹு வான், வென்லிங் நக ரங்களில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால், ஷாங்காய் நகரில் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. சூறாவளியை முன்னிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், மொத்தம் 2,230 விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், இன்று (10.8.2026) 720க்கும் மேற்பட்ட விமான சேவை யும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஹாங்சவ் ஜியாவ் ஷான் சர்வதேச விமான நிலையம், 500-க்கும் மேற்பட்ட விமானங்களை தரையில் நிறுத்தி வைத்தது.

இன்று 180-க்கும் மேற் பட்ட விமானங்களின் சேவையும் ரத்து செய் யப்பட்டு உள்ளது. ஜெஜியாங் மாகாணத்தில் நிங்போ லிஷே மற்றும் வென்ஜவ் லாங்வான் விமான நிலையங்களில் எந்த விமானமும் இயக்கப்படவில்லை. வருகின்ற 12.8.2026 வரை 44 விமான நிலையங்கள் சூறாவளியால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்ஜிங், ஹெபய் மற்றும் ஊகான் நகரங்களிலும் விமான சேவை இன்று முதல் நிறுத்தப்படும்.

இதேபோன்று, ஷாங்காய் நகரில் ரயில் சேவையும் பாதிப் படைந்து உள்ளது. நடப்பு ஆண்டில் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது இருக்கும். இதனால், நீண்டநேர மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த மாதம் சீனாவை தாக்கிய பவி சூறாவளியை விட 40 மடங்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *