கேரளத்தில் ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் முதலமைச்சர் வி.டி. சதீசன் அறிவிப்பு

1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 11 கேரளாவில் ஜூன் 15-ஆம் தேதி முதல் அரசு சாதாரண பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ‘பிரியதர்ஷினி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா

பேருந்துகளில் இலவச பயணம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் வி.டி. சதீசன் கூறியதாவது:திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:தகுதி: இந்த இலவசப் பயணத் திட்டத்திற்கு வயது வித்தியாசமோ அல்லது வருமான வரம்போ எதுவும் கிடையாது. பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் இதில் பயனடையலாம்.

முதல்கட்டமாக, குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் மட்டுமே இந்த இலவச பயணம் அனுமதிக்கப்படும். இத்திட்டத்தை மற்ற பேருந்துகளுக்கும் விரிவுபடுத் துவது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை

இந்த இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (KSRTC) கணிசமான நிதி இழப்பு ஏற்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். அதன் விவரங்கள்:கால அளவு மதிப்பிடப்பட்ட நஷ்டம்மாதத்திற்கு ரூ.65 கோடி முதல்ரூ.75 கோடி வரைவருடத்திற்குசுமார் ரூ.800 கோடி”ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாநில அரசு சார்பில் ஆண்டிற்கு ரூ.1,500 கோடி நிதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தினால் ஏற்படும் கூடுதல் நஷ்டத்தையும் கேரள அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும்” என்று முதலமைச்சர் வி.டி. சதீசன் உறுதியளித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *