கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.6.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கொள்கை கட்டாயம் என்ற ஆணை தன்னிச்சையானது, நியாயம் அற்றது எனக் கூறி கல்வியாளரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பவுசியா கான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மத்தியப்பிரதேச மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு அதிரடி நிராகரிப்பு. ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எதிர்க்கட்சிகளின் விரிசல் எதிரொலி; தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி? அதிக எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்துள்ளதால், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு புத்துயிர் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி இந்து:

* அரசு நடத்தும் ‘அரசு கேபிள் டிவி’ தளத்தில் மூன்று தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம்.

தி டெலிகிராப்:

* பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த மம்தா திட்டமிடும் நிலையில், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து மம்தாவுக்கு  எதிராக 16 திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி – மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியுடன் சந்திப்பு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தேசிய மருத்துவ ஆணையத்தில் (NMC) நிலவும் தொடர்ச்சியான காலிப்பணியிடங்கள் மற்றும் முக்கிய சட்டப்பூர்வ பதவிகளை நிரப்புவதில் அரசு தவறியதே மருத்துவ சேர்க்கைகள், ஒப்புதல்கள், ஆய்வுகள் மற்றும் மேல்முறையீடுகளில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதங்களுக்குக் காரணம் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி அறிக்கை.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *