அரசு கேபிளில் 3 செய்தி சேனல்கள் முடக்கம்: முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read

சென்னை, ஜூன் 10 அரசு கேபிள் டிவியில் இருந்து 3 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் கன்டென்ட்டுகளுக்காக, ‘‘என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சியுங்கள்” என்று மேடைகளில் பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது தன் ஆட்சியின் அவலங்களை மூடிமறைக்கப் பார்க்கிறார்.

அரசின் குறைகளையும், மக்கள் சந்திக்கும் தோல்விகளையும் சுட்டிக் காட்டும் செய்திச் சேனல்களின் குரலை அதிகார பலத்தால் முடக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமர்சனங்க ளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அரசு கேபிள் மூலம் சேனல்களை நீக்கியிருப்பது அப்பட்டமான ஊடகச் சுதந்திரப் பறிப்பாகும். விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாத இந்த ‘சோபா மாடல்’ அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *