“ஓராண்டுக்கு யாரும் வெளிநாடு பயணம் செய்யவேண்டாம், தங்கம் வாங்கவேண்டாம், சமையல் எண்ணேய் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிய பிரதமர் மோடி தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வெளிநாட்டிற்கும் ஒரு வாரம் பயணம் செய்ய உள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு ஜூன் 13 முதல் 19ஆம் தேதி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோடி மட்டும் இல்லாமல் ஏற்கெனவே ஒன்றிய அமைச்சர்கள் குழு மற்றும் தலைமை நீதிபதியோடு கூடிய மூத்த நீதித்துறை நிர்வாகிகள் லண்டனில் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளனர். மோடியின் பேச்சு எல்லாம் சாமானியருக்கு மட்டும் தானோ?
