கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் நகரில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அணுமின் நிலையம் உள்ளது. ஒன்றிய அணுசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அணுமின் நிலையத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு:
பணி விவரம்: மெக்கானிக்கல், சிவில், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிக்கல், பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ், எச்.ஆர். உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
மொத்த எண்ணிக்கை: அய்டிஅய் 124, டிப்ளமோ 18, பட்டப்படிப்பு 16 என மொத்தம் 158 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்.,/டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஊதியம்: மாதம் ரூ. 9,600 – 10,900 வரை
விண்ணப்பிக்கும் முறை: இணையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2026
கூடுதல் விவரங்களுக்கு: npcil.nic.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *