சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை

2 Min Read

இளைஞர் அரங்கம்

விமான நிலையங்களில் வான்வழி சரக்கு வணிகத்தின் வளர்ச்சியை நிர்வகிப்பதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான ஏஏஅய் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைடு சர்வீசஸ் நிறுவனம். 2016 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரக்கு கையாளுதல், லாஜிஸ்டிக்ஸ் சேவைகள், கிடங்கு வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை நிர்வகித்து வருகிறது.

நாட்டின் விமான சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 62 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

வேலைவாப்பு அறிவிப்பு எண். AAICLAS/HR/CHQ/Rectt./Asstt.(Sec)/2026

பணி: Assistant (Security) மொத்த காலியிடங்கள்: 62

வயது வரம்பு: 1.6.2026 தேதியின்படி 21-க்குள் இருக்க வேண்டும். ஊதியம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.21,500), இரண்டாம் ஆண்டு ரூ.22,000), மூன்றாம் ஆண்டு ரூ.22,500.

தகுதி: +2-வில் முதல் வகுப்பில் (60 சதவீதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதி, உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி,இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100. கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தவும் .

விண்ணப்பிக்கும் முறை: www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.7.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *