புதுடில்லி, ஜூன் 10 டில்லியில் நடை பெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள பழக வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முக்கியமாக, ‘‘தமிழ்நாட்டில் தி.மு.க. வுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டது மிகப்பெரிய தவறு’’ என்று அகிலேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரங்களில் காங்கிரஸ் இன்னும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது விமர்சனம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
