முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா, திராவிடர் எழுச்சி நாள் பரப்புரைக் கூட்டம்

2 Min Read

சோலையார்பேட்டை, ஜூன் 9- முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் சோலையார்பேட்டை கடை வீதி யில் 5.6.2026 அன்று மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது.

இக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன் வரவேற் புரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர் பெ.கலை வாணன் தொடக்கவுரையாற்றினார். சிறப்புரையாக: ப.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், கழகப் பேச்சாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன்  ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

பேச்சாளர்கள் முத்தமிழறிஞரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு சமுக சீர்திருத்த திட் டங்களையும், கலை, இலக்கியம் சார்ந்த சாதனைகளையும் விளக் கிப் பேசினார்கள். திராவிட சித்தாந்த கொள்கைகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. இது மனித சமத்துவத்திற்கான கொள்கை, சமூக நீதிக்கான கொள்கை. தந்தைபெரியாரின் கொள்கைகளை தனது ஆட்சிக் காலத்தில் அண்ணாவை தொடர்ந்து முத்தமிழிஞர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரைக்கும் சிறப்பாக நடைமுறைபடுத்தி ஆட்சி செய்தார்கள். இவர்கள் செய்த சாதனைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும். இது காலத்தின் தேவை, அதை உணர்ந்து தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இது போன்ற பரப்புரைக் கூட்டத்தை நடத்த அறிவுறுத்தினார் என்று தமது பேச்சில் குறிப்பிட்டனர்.

இக் கூட்டத்தில்
பங்கேற்ற தோழர்கள்

நரசிம்மன் { மாவட்டக் காப்பாளர்), கோ.அன்புச் சேரன் ( நகரத்தலைவர் வாணியம்பாடி), பீமன் (விடுதலை சிறுத்தைகள் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்), ஏ.டி.சித்தாரத்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), இரா.கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்).

கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப.க.), நா.நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்), மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிஙச செயலாளர்), கே.மோகன் (மாவட்ட தலைவர்  பெ. கட்டுமான தொழிலாளரணி).    கோ.சங்கர் (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்), சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத் தலைவர்), லட்சுமணன் (லக்கி நாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்), பிரபாகரன் (கற்பிபயிலகம் ) மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.

நகர அமைப்பாளர்- பொதுக் குழு உறுப்பினர் கே.இராஜேந்திரன்  நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *