கூகுள் நிறுவன அதிகாரி சுந்தர் பிச்சை நம்பிக்கை
வாசிங்டன், ஜூன் 8 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஏ.அய். வளர்சியால் சில பாரம்பரிய வேலைகள் பாதிக்கப்பட்டாலும், அதே நேரத்தில் ஏஅய்யை கையாளுதல், தரவு அறிவியல், ஏஅய் மாடல் பயிற்சி, மென் பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல புதிய துறைகள் உருவாகும் என்று அவர் கூறினார்.
“ஏஅய் ஒரு கருவி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இளைஞர்களின் எதிர்காலம் இருக்கிறது. இந்திய இளைஞர்களிடம் பெரும் திறமை இருக்கிறது. ஏஅய்-யை கற்றுக்கொண்டு அதை வைத்து புதிய தீர்வுகளை உருவாக்கினால் உலகளவில் வாய்ப்புகள் கிடைக்கும்” என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.
ஏஅய் புரட்சியை பயமாக பார்க்காமல், வாய்ப்பாக பார்த்து திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு அவர் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
