புதுடில்லி, ஜூன் 07 அமெரிக்காவில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 3,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.கடந்த 5 மாதங்களில் 1,076 பேர் நாடு கடத்தல்
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்:
“நடப்பு ஆண்டில் இதுவரை (கடந்த 5 மாதத்தில்) 1,076 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றன.”
சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கு பாதிப்பில்லை
மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் அதே வேளையில், சட்டப்பூர்வமான குடியேற்றம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி, குடியேற்றம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய வியூகம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
“உலக உணவு பாதுகாப்பு நாள்” இன்று (ஜூன் 7, 2026)
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுகிறார். அசுத்தமான உணவை உண்பதால் 200 க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. தூய்மையற்ற உணவு மூலம் பரவும் நோய்கள் 40 சதவீதமாகும். பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். உலக உணவு பாதுகாப்பு நாளானது உணவு பாதுகாப்பு சம்பவங்கள் குறித்து கவனத்தை ஈர்க்கிறது. உணவுப் பாதுகாப்புச் சம்பவங்கள் எவ்வளவு எளிதானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தாலும் அதற்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
