அரித்துவார் படித்துறையில் 300-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் எடுத்த நபர்; ‘போக்சோ’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கொந்தளிப்பு!
நோட்டுப் புத்தகத்தில் ரகசிய அறை அமைத்து மொபைல் காமிரா மூலம் 300க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் குளிப்பதை, ஆடை மாற்றுவதைப் படம்பிடித்த பார்ப்பனரான விகாஷ்குந்தரா என்பவனை மன்னிப்புக் கடிதம் மட்டும் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அனுப்பியதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பார்ப்பனர் என்பதால் அந்த நபர் விடப்பட்டார் என்றும், இதே நேரத்தில் சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தேசிய ஊடகங்களில் இடம் பெற்றிருப்பார் என்றும் கருத்து தெரிவிக்கினறனர்.
‘புண்ணிய நகரம்’ என்று அவாளால் விளப்பரப்படுத்தப்படும் உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பிரசித்தி பெற்ற ஷிவ்காட் படித்துறை பகுதியில், விகாஷ் குந்தரா என்ற பார்ப்பனர் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய வகையில் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் அலைந்து திரிந்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகள் குளிக்கும் மற்றும் உடை மாற்றும் பகுதியிலேயே அவர் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அங்கிருந்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை சில பெண்கள் உற்று நோக்கியபோது, அதில் இரண்டு சிறிய துளைகள் இருப்பதை கவனித்துள்ளனர். உடனே இதுகுறித்து அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளித்தனர்.
நோட்டுப் புத்தகத்திற்குள் ரகசிய கேமரா
பாதுகாவலர்கள் அந்த நபரைத் பிடித்து, அவரிடமிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிச் சோதனையிட்டனர். அப்போது, அந்த புத்தகத்தின் உள்ளே ஒரு புதிய ஆப்பிள் கைப்பேசி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒளிப்படக் கருவி இருக்கும் பகுதியில் மட்டும் நோட்டுப் புத்தகத்தில் துளை போட்டு, படித்துறையில் குளிக்கும் பெண்கள், சிறுமிகள் மற்றும் உடை மாற்றும் பெண்களை அவர் ரகசியமாகப் படம் பிடித்து வந்துள்ளார்.

அவரது கைப்பேசியைச் சோதித்தபோது, சுமார் 400-க்கும் மேற்பட்ட பெண்களின் ரகசியப் படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தரவுகளை அவர் பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து, சட்டவிரோதமாக வருவாய் ஈட்டி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சிறுமிகளும் அடங்குவதால், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக ‘போக்சோ’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த நபர் பார்ப்பனர் என்பதால், காவல்துறையினர் அவரிடம் நிகழ்விடத்திலேயே மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு, எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், படித்துறையில் நடந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும், அந்த நபரின் செயலையும் தங்களது கைப்பேசிகளில் காணொலியாகப் பதிவு செய்தனர். தற்போது இந்த காணொலிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், காவல்துறை மீதான கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
பார்ப்பனருக்கு ஒரு நீதி
குருக்ஷேத்திரம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 15 வயது சிறுமிக்கு மருத்துவர் பாலியல் வன்கொடுமை!
ஏற்கெனவே இதே மருத்துவமனையில் 2017ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டும் இதே மருத்துவர் மீது உள்ளது.
குருக்ஷேத்திரம்
அரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமிக்கு அங்குள்ள மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் பேரில்தான் மருத்துவர் ஷைலேந்திரா (சர்மா) என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்துள்ள வாக்கு மூலத்தின்படி, வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவ மனைக்கு வந்தவரை, மருத்துவர் ஷைலேந்திரா மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
முதலில் அந்த மருத்துவர் தனது ரகசிய உறுப்புகளைத் தொட்டு தவறாக நடந்து கொண்டதாகவும், பின்னர் அடுத்தடுத்து பலமுறை தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான தாக்குதலால் சிறுமிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிறை சென்ற மருத்துவர்:
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் ஷைலேந்திர சர்மாவுக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு, பெண் ஒருவருக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்றுவரை இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையிலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
