“டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வெறும் நம்பர்தான்!” பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைமை உறுப்பினரின் பேச்சால் சலசலப்பு

2 Min Read

புதுடில்லி, ஜூன் 6- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வரும் வேளையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான டாக்டர் ஷமிகா ரவி தெரிவித்துள்ள கருத்து பொது மக்களிடையேயும் பொருளாதார வல்லுநர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் செய்தி நிறுவன மான ஏ.என்.அய்-க்கு அளித்த பேட்டியில், “டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயைத் தொட்டால் என்ன? அது வெறும் ஒரு எண்தான். அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று அவர் மிகவும் சாதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி  பட்டம் பெற்ற ஒரு உயர்மட்ட ஆலோசகரிடமிருந்து இப்படி ஒரு பொறுப்பற்ற பதில் வந் திருப்பது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது

.அன்று கவலை…
இன்று அலட்சியம்?

கடந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியின் போது ரூபாயின் மதிப்பு லேசாகச் சரிந்தபோது கூட, நாட்டின் பொருளாதாரம் அழியப் போகிறது எனப் பதறிய இதே பொருளாதார வல்லுநர்கள், இன்று ரூபாய் மதிப்பு 100-அய் நெருங்கும் வேளையில் “அது வெறும் நம்பர்தான்” என மழுப்புவது இவர்களின் இரட்டை நிலையைத் தோலுரித்துக் காட்டுவதாக நெட்டிசன்கள் சாடுகின்றனர்.

ரூபாய் மதிப்பு 100-அய்த் தொட்டால் சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?பொருளாதார ஆலோசகருக்கு இது வெறும் “எண்ணாக” இருக்கலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் இது சாமானியர்களைப் பின்வரும் வழிகளில் மிகக் கடுமையாகப் பாதிக்கும்:

விலைவாசி உயர்வு இந்தியா தனது கச்சா எண்ணெய்  தேவை யில் 80 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி செய்கிறது. டாலரின் மதிப்பு உயரும்போது, நாம் எண் ணெய் வாங்கக் கூடுதல் ரூபாய் செலுத்த வேண்டும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறும்.

இந்தியாவில் தற்போது பெரும்பாலான இறக்குமதிக்கான கட்டணம் டாலரிலேயே பரிமாற்றம் நடக்கிறது. இத னால்  12 மடங்கு அதிக தொகை இறக்குமதியாளர்கள் கட்டவேண்டி இருக்கும் இதனால் இறக்குமதியாகும் வீட்டு உபயோகப் பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் பெறும் இது எல்லாம் இந்த பொருளாதார முனைவருக்கு தெரியாமல் இல்லை ஆனால் மோடியின் இமேஜ் டாலர் விவகாரத்தில் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கூசாமல் பொய் சொல்கிறார் முனைவர் ஷமிகா ரவி

2022 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இதே போன்று இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை. உலக பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது என்று கூறினார். அவர்தான் இன்றும் நமது நிதி அமைச்சர் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *