ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, ஜூன் 4- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 31.5.2026 அன்று மாலை 6 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் சென்னகிருட்டிணன் கடவுள் மறுப்புக் கூற மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஒருங்கி ணைப்பில் மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடை பெற்றது.

முதலில் கழக  தலைமை அறிவிப்பிற்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழாவை 06-06-2026 சனிக்கிழமை அன்று ஆவடி மாவட்ட கழகத்திற்குட்பட் பிரிட் டானியா எதிரில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியிலும் 08.06.2026 திங்கட்கிழமை அன்று பட்டாபிராம் பகுதியிலும் சிறப்பாக நடத்துவதென்றும் அதற்காக மாவட்ட கழகத் தோழர்களின் பங்களிப்பு மற்றும்  கூட்டம் நடைபெறும் இரண்டு  நாட்களிலும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேற்கண்ட கோரிக் கையையொட்டி மாவட்ட கழக துணைத்தலைவர் மு.ரகுபதி, பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன், திருமுல் லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், ஆவடி நகர கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேல் மாவட்ட மகளிரணி தலைவர் சி.ஜெயந்தி, மாவட்ட கழக இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு, செயலாளர் சு.வெங்க டேசன், பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் தி.மணிமாறன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத்தலைவர் ஜெயராமன், மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவக்குமார், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், ஆவடி புருசோத்தமன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் ம.சிலம்பரசன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் சோ.ராதிகா, பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *