சென்னை, ஜூன் 4- “திருச் சியில் வீர வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், சட்ட மன்றத்தில் ஏன் அப்படி பேச வில்லை? பிரதமர் மோடி முன்னிலையில் உங்கள் சக்தி எங்கே போனது?” என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியுடன் இணைந்து ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவர் கூறிய தாவது:
முதலமைச்சராக தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி சென்ற ஜோசப் விஜய், அங்குக் சுமார் 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். தன்னுடைய தகுதியைக் குறைத்துக் கொண்டு அவர் பிதற்றியுள்ளார், வீர வசனம் பேசியுள்ளார்.
சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய ஜோசப் விஜய்யின் குரலில் இருந்த வலிமை, அழுத்தம் மற்றும் சப்தத்தையும், திருச்சியில் அவர் எள்ளலும் துள்ளலுமாக கர்ஜிப்பதாக நினைத்துக்கொண்டு கத்திப் பேசியதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சட்டமன்றத்திற்கு உள்ளே ஏன் இந்தத் தளர்வு, தயக்கம், மயக்கம் மற்றும் இயலாமை? ஆனால் வெளியில் மட்டும் ஏன் இந்த வீர வசனம்?
“நாங்கள் உங்கள் அரசை 6 மாதங்களுக்குப் பிறகுதான் விமர்சிப்போம் என்று கூறினோம். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால், அதை விமர்சனம் என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சரி செய்வதில் என்ன பிரச்சினை? காவல் துறை முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தானே இருக்கிறது?
அவர் கொண்டு வந்த ‘சிங்கப் பெண்’ திட்டத்தில் கையெழுத்து போட்டாரே, அதற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? ஏன் இதுவரை அதைத் துவக்கி வைக்கவில்லை? மேகதாது அணை குறித்துப் பேசும்போது, ‘திமுகவும் மு.க.ஸ்டாலினும் இருக்கும் வரைதான் எங்களுக்குப் பிரச்சினை, ஜோசப் விஜய் எங்களுக்குப் பிரச்சினையே இல்லை; எங்கள் தயவில்தான் அங்கு ஆட்சி நடக்கிறது’ என்று கருநாடக முதலமைச்சர் பேசியிருக்கிறார்.”
“மின்சாரம் தடைபட்டால் கூட அதற்கு காரணம் திமுக தான், ஸ்டாலின் சார் தான் என்று சொல்கிறீர்கள். தவெக அரசுக்கு எதிர்கால திட்டமும் கிடையாது. உங்களை வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் 65 விழுக்காடு மக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். திமுகவை விமர்சித்து உங்கள் தகுதியை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம்.”
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பதிலளிக்காதது ஏன்?
“திருச்சியில் வீர வசனம் பேசிய ஜோசப் விஜய், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை? பிரதமர் முன்னிலையில் உங்களின் சக்தி எங்கே போனது?” என்றும் கேள்வி எழுப்பினார்.
விசிக உடனான கூட்டணி குறித்து விளக்கம்
விசிக குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “சொந்த தம்பி, சொந்த அண்ணன் எதிர்பார்த்த நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்றால் கோபம் வருவது இயல்பு. பின்னர் மீண்டும் சேர்ந்து கொள்வோம்.
அப்படித்தான் விசிக மீது அன்று கோபத்தில் பேசியிருப்போம், அவர்களும் பேசியிருப்பார்கள். இது வெறும் சகோதர முரண்பாடுதான், இது நிரந்தரம் கிடையாது” என்று ஆ.ராசா விளக்கமளித்தார்.
