வழக்கு விசாரணை முடிந்த மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

1 Min Read

சென்னை, மே 31- – உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை முடிந்த 3 மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வழிகாட்டி நெறிமுறை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் முடிந்த பின்னரும் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு, அரசியல் சாசன பிரிவு 142 அடிப்படையில் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி வழிகாட்டிநெறிமுறை வழங்கிஉத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை முடிந்த 3 மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பிணை வழக்குகளில் விசாரணை முடிந்த மறுநாள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,  பிணை உத்தரவுகளை உடனுக்குடன் சிறை அதிகாரிகளுக்குத் தெரி விக்க வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள் உத்தரவு பிறப்பித்த அன்று அல்லது மறுநாள் விடுவிக்கப்பட வேண்டும் – என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தீர்ப்பு விவரங்களை ஒரு வாரத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல முக்கிய பரிந்துரைகளை வகுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *