‘விடுதலை’-ஆபீஸ் சோதனை அசம்பிளியை ஒத்திவைக்க குமாரராஜ முத்தையா செட்டியார் பிரேரேபணை நமது நிருபர்

2 Min Read

சென்னை. அக். 7 இன்று பிற்பகல் சென்னை அசம்பிளியில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா முத்தையா செட்டியார் அவர்கள் கீழ்க்கண்ட ஒத்திவைப்புப் பிரேரேபணையைக் கொண்டு வந்தார். சென்ற ஆகஸ்ட் 3ந்தேதி ஈரோடு விடுதலை – குடிஅரசு பத்திரிகாலயங்களை போலீசார் சோதனை செய்த விஷயம் பொது ஜனங்கள் அறியவேண்டியது அவசியமும், அவசரமுமானபடியால் ஷ விஷயத்தைக் குறித்து விவாதிக்க இச்சபையை ஒத்திவைக்கத் தீர்மானிக்கிறது. இது சட்ட நிர்வாகத்திற்குப் புறம்பானதா? உட்பட்டதா? என்று தலைவர் கேட்டார்.

எந்த சந்தர்ப்பத்தில் சோதனைக்கு உத்தரவிடப் பட்டது என்பது தமக்குத் தெரியாதென குமாரராஜா முத்தையச் செட்டியார் தெரிவித்தார். நியாய விரோதமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தீர்மானத்தைத் தம்மால் அனுமதிக்க முடியாதென தலைவர் பதிலளித்தார். சட்டத்திற்கு மீறி ஏதாவது நடைபெற்றிருக்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்லத் தயாராயிருந் தால் தமக்கு ஆட்சேபணை இல்லையென்று பிரதம மந்திரி தெரிவித்தார்.

சட்டத்தை நிறைவேற்றுகையில் போலீசார் செய்யும் காரியங்களை சபையில் விவாதிக்கக் கூடாதென்று பிரதம மந்திரியார் கூறியிருப்பது தமக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சட்டத்தை நிறைவேற்றுவதில் போலீசார் தவறியிருக்கிறார்களா எனத் தலைவர் கேட்டார்.

போலீசார் சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது செய்தால்தான் இம்மாதிரித் தீர்மானங்கள் கொண்டு வர வேண்டுமெனத் தலைவர் கருதுகிறாரா என ஸர் ஏ.டி.பன்னீர் செல்வம் கேட்டார். சட்டத்தை விட்டு விலகி ஏதாவது செய்திருந்தால் தான் இம்மாதிரித் தீர்மானத்திற்கு இடமிருக்க முடியுமெனத் தலைவர் பதிலளித்தார்.

கடைசியாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தலைவர் நிராகரித்துவிட்டார்.

(‘விடுதலை’, 8.8.1939, பக்கம்.3)

– – – – –

மேற்கு ஜெர்மனியில் விடுதலை

25.6.1988 மேற்கு ஜெர்மனியின் தலைநகரான பான் என்ற நகரிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்துள்ள விடுதலைப்புலிகள் வெளியிடும் ஏடு தமிழீழச் செய்திகள். இந்த ஏட்டில் விடுதலையில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளை வெளியிடுவ தாகவும், ஈழம் பற்றிய உண்மைச் செய்திகளுக்காக விடுதலைக்குப் பாராட்டுத் தெரிவித்தும் மேற்கு ஜெர்மனி விடுதலைப் புலிகள் கடிதம் எழுதி யிருந்தனர்.

‘விடுதலை 75′ (பவள விழா மலர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *