சென்னை, மே 30- தேர்வுத் துறை இணை இயக்குநர் மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப் பட்டது.
அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, ஒளிப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் செய்ய இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஒரு நகலை மாணவர் களிடமும் வழங்க வேண்டும்.
