10ஆம் வகுப்புத் தேர்வு: தற்காலிக சான்றிதழில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு! தேர்வுத்துறை இயக்ககம் தகவல்

சென்னை, மே 30- தேர்வுத் துறை இணை இயக்குநர் மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப் பட்டது.

அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, ஒளிப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் செய்ய இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஒரு நகலை மாணவர் களிடமும் வழங்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *