செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்ட த.வெ.க. நிர்வாகிமீது வழக்குப்பதிவு

2 Min Read

வேலூர், மே 29 வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என மாமூல் கேட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் 25ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து த.வெ.க. நிர்வாகி விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய 3 பேர் மீது நேற்று  (28.5.2026) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் உள்ளிட்டோர் தன்னை வழிமறித்து தாக்கியதாக விஜயகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், ரமேஷ், சுனில், தினகரன், சுமன் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

முதலமைச்சர் ஜோசப் விஜய் கையெழுத்திட்ட முதல் திட்டம்

‘சிங்கப்பெண்’ அதிரடிப் படை
தொடக்க விழா ரத்தானதால் பரபரப்பு!

சென்னை, மே 29 தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளில் விஜய் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ திட்டத்தின் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகத்திற்கு வெளியே விஜய் பங்கேற்கவிருந்த முதல் அரசு முறை நிகழ்ச்சி இதுவாகும். இதனால் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இதற்கான ஏற்பாடுகள்   மாபெருமளவில் செய்யப்பட்டிருந்தன.

இந்த விழாவிற்காக கடந்த சில நாட்களாகவே காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் தரப்பில் தீவிர ஒத்திகைகள் (Rehearsals) நடத்தப்பட்டு, அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. விழா நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களே இருந்த நிலையில், விழா திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விழா ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வக் காரணம் என்ன என்பது குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் முதல் பொது நிகழ்ச்சி என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திடீர் அறிவிப்பால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களா அல்லது நிர்வாக ரீதியிலான மாற்றங்களா என்ற கோணத்தில் பல்வேறு விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *