அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்ய முடியாது போட்டித் தேர்வுகள் மூலமாகவே உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2 Min Read

சென்னை, மே 29 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து செய்துள்ள நீதிமன்றம், போட்டித் தேர்வுகள் மூலமாகவே உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கவுரவ விரிவுரையாளர்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் பணி வரன்முறை செய்ய 2020-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2022-இல் இந்த அரசாணையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

இதை எதிர்த்து கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கில், “2020 அரசாணையின்படி அவர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்” என்று 2024 ஏப்ரல் 2-ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற அமர்வின்
அதிரடித் தீர்ப்பு

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து பின்வரும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது:

போட்டித் தேர்வு கட்டாயம்

கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி அளவிலான குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களை நேரடியாக பணி வரன்முறை செய்வது உச்ச நீதிமன்றத்தின் போட்டித் தேர்வு கொள்கையை நீர்த்துப்போகச் செய்துவிடும். எனவே, தேர்வு மூலமே நியமனங்கள் நடக்க வேண்டும்.

1,292 பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு: அரசு கல்லூரிகளில் உள்ள 1,146 பணியிடங்கள் மற்றும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் 146 பணியிடங்கள் என மொத்தம் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட அரசு உத்தரவிட வேண்டும்.

4,000 பணியிடங்களுக்கு தேர்வு: ஏற்ெகனவே 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், அவர்களுக்கு உரிய போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கான சலுகைகள்

நீண்ட காலமாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது:

போட்டித் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் வழங்கலாம்.

நீண்ட காலம் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட வேண்டும்.

தேர்வு நடைமுறைகள் முடிந்து புதிய நியமன உத்தரவுகள் வழங்கப் படும் வரை, தற்போது பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது.

இந்த ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளையும் 6 மாதங் களுக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட் டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *