குமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாகர்கோவில் மாநகர் பகுதியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பா.பொன்னுராசன், எஸ்.அலெக்ஸ், ச.ச.மணிமேகலை, ச.ச.சத்யா ராணி பங்கேற்றனர். பகுத்தறிவு நூல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
