வங்கிப் பணிக்கான இணையவழித் தேர்வில் ‘சர்வர்’ கோளாறு கணினிகளை உடைத்து மாணவர்கள் போராட்டம்!

பிரயாக்ராஜ், மே 26  உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெற்ற வங்கிப் பணிக்கான இணையவழித் தேர்வின் போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் சரியாகாததால் ஆத்திரமடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்திலிருந்த கணினிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிப் பணிக்கான
இணையவழித் தேர்வு

பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் தேர்வு மையத்தில் வங்கிப் பணிக்கான ஆன்லைன் தேர்வு நேற்று (25.5.2026) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு தொடங்கப்பட்ட சில நிமிடங் களிலேயே எதிர்பாராத விதமாக இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மின்சாரம் திரும்பிய போதிலும், தேர்வு எழுதுவதற்கான இணைய இணைப்பு சரிவர செயல் படவில்லை. “சர்வர் கோளாறு” மற்றும் மிகவும் மெதுவான இணைய வேகம் காரணமாக, பெரும்பாலான மாணவர்களால் கணினியில் லாக்-இன் கூட செய்ய முடியவில்லை. நேரமோ வேகமாக ஓடிக்கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் மாணவர்கள் திகைத்து நின்றுள் ளனர்.

இணையப் பிரச்சனை சரி செய்யப்படும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருந்த வேளை யில், தேர்வு மய்ய நிர்வாகம் தரப் பிலிருந்து திடீரென அதிர்ச்சி யூட்டும் அறிவிப்பு ஒன்று வெளி யானது.

“தேர்வுக்கான நேரம் முடிந்து விட்டது. எனவே, அனைவரும் உடனடியாக லாக் அவுட்  செய்து விட்டு வெளியேறுங்கள்.”

என்ற அறிவிப்பைக் கேட்டு மாணவர்கள் நிலைகுலைந்து போயினர். இந்த அறிவிப்பால் ஆத்திர மடைந்த மாணவர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களிடம் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “நாங்கள் இன்னும் லாக்-இன் கூட செய்யவில்லை. தேர்வு எழுதவே ஆரம்பிக்காத போது, எங்களை எப்படி தேர்வு எழுதியவர்களாகக் கணக்கில் கொள்வீர்கள்? எங்களின் எதிர்காலம் என்னாவது?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர்

அதற்கு அங்கிருந்த ஊழி யர்கள், “நாங்கள் வெறும் தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே. தேர்வு நடத்துவது, நேரத்தைக் கட்டுப்படுத்துவது எல்லாம் எங்கோ இருக்கும் தலைமை நிர்வாகத்தின் வேலை. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.

கணினிகள் உடைப்பு

இதனால் பொறுமையிழந்த மாணவர்கள், தேர்வு அறை யில் இருந்த கணினிகள், மானிட் டர்கள் மற்றும் உபகரணங்களை ஆவேசத்துடன் அடித்து நொறுக் கத் தொடங்கினர். நிலைமை கையை மீறிச் சென்றதால், அங்கிருந்த பாதுகாவலர்களும் இதர ஊழியர்களும் மாணவர் களைத் தடுக்க முற்படாமல், தங்களுக்கு அடி விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

நீட் தேர்வுக்கும் இதே நிலையா? – மாணவர்கள் கவலை

இந்த நிகழ்வு சமூக வலைத் தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து ‘நீட்’மருத்துவப் நுழைவுத் தேர்வும் இதே போல் முழுமையாக இணைய வழியில் நடத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவிலான மிக முக்கியமான தேர்வுகளுக்குக் கூட முறையான மின்சார வசதியோ, அதிவேக இணைய இணைப்போ, மாற்றுத் திட்டங்களோ இல்லாமல், தேர்வு மய்யங்கள் இவ்வளவு அலட்சியமாகச் செயல்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற இணைய வழி தேர்வு களில் குளறுபடிகள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான விதமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *