தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் கரோனா அச்சத்தில் பொதுமக்கள்! பொதுசுகாதாரத்துறை விளக்கம்

சென்னை, மே 24- தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலுடன் சேர்ந்து கடுமையான உடல் வலி, சளி, தொண்டை எரிச்சல் மற்றும் நீடித்த இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதால், “மீண்டும் கரோனா பரவத் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீடிக்கும் காய்ச்சல்

பொதுவாக சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். ஆனால், தற்போது பரவி வரும் காய்ச்சல் பலருக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.

“கரோனா காலத்தில் இருந்தது போன்றே கடுமையான உடல் வலி, தொண்டை வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது” என்று மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தங்களின் கவலையை வெளிப்படுத்துகின்றனர். இதனால், தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா? என்ற குழப்பமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

பொதுசுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்களின் விளக்கம் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் வதந்திகளை மறுத்துள்ள பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

பருவகால காய்ச்சல்

தற்போது தமிழ்நாட்டில் டெங்கு, டைபாய்டு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல்களே பரவி வருகின்றன.

தற்போது கரோனா பெரு மளவில் பரவுவதற்கான ஆதாரங் கள் இல்லை. காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை. எனினும், மருத்துவர்களின் பரிந் துரையின் பேரில் தேவைப்பட்டால் பரிசோதனை செய்யலாம்.

வெயிலின் தாக்கம்

வெயில் அதிகமாக இருப்பதால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும் உடல் சோர்வு கூட காய்ச்சல் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.

அரசு நடவடிக்கை

காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தேவையான தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் இலவச ஓஆர்எஸ் (ORS) கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து அவசியம்

உடல் சூட்டைத் தணிக்கவும் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கவும் போதிய அளவு தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெயிலைத் தவிர்க்கவும்: மதிய நேரங்களில் நீண்ட நேரம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது மூச்சுத்திணறல், அதிக சோர்வு, நீண்ட நாள் இருமல், உணவு சாப்பிட முடியாத நிலை போன்ற தீவிர அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

“காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை; அதே சமயம் அலட்சியமாக இருக்காமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *