இலங்கையில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

2 Min Read

கொழும்பு, மே 23- மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடக்கு, வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரக் காலமாகவே இலங்கையின் மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம் கிழக்கு, வடக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் கனமழையைப் பெய்து வருகிறது.

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்மழை

அந்த வகையில் இலங்கையில் 21.5.2025 அன்று யாழ்ப்பாணம், கட்டுக்கஸ்தோட்டை, கட்டுநாயக்கா, அநுராதபுரம், வவுனியா திருகோண மலை, புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது இதில் அதிகபட்சமாக 197.4 சென்டி மீட்டரில் இரத் மாலானை, குணா கல்லில் 176.1 சென்டிமீட்டர் மலையும், ரத்தின பொறியில் 50.2 cm மலையும் கொழும்புவில் 99.7 சென்டிமீட்டர் அதிக கனமழையும் பதிவானது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் 336.5 மில்லிமீட்டர்அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள தாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஏற்படும் அதிக அபாயம் உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை

இந்த நிலையில், மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் என்பனவும், காலி மாவட்டமும் இவ்வாறு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இலங்கையின் வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட உள்ளிட்ட மாகாணங்களின் மண்சரிவு ஏற்படும் அதிக அபாயம் உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இரண்டாம் நிலைமண்சரிவு எச்சரிக்கை

மேலும் கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின்

அத்தனகல்ல

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல

கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல

கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை

களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, புளத்சிங்களஇங்கிரிய, பாலிந்தநுவர பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் மத்துகம, கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்காப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றம்

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாகாண அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு வேண் டிய உணவு, உடை, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அதிகாரிகள் செய்துதர உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *