பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை வலுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.5.2026 அன்று மாலை  மணிக்கு பெரியார் மய்யம் அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் ச.வெங்கட்ராமன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் அனைவ ரையும் வரவேற்றார். சிறப்புரையாகக் கூட்டத்தின் நோக்கம் பற்றி மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் விளக்கவுரையாற்றினார். சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டுத் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பணி யினை விளக்கிக் கூறினார்.

ஆசிரியர் கூறிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். மாநிலப் பகுத்தறிவாளர் கூட்டம் நடத்தலாம் எனச் சொன்னபோது, முதலில் மாவட்டங்கள் தோறும் சென்று கலந்துரையாடல் நடத்தி வாருங்கள் என அறிவுரை கூறிட, அதன் பேரில் வந்துள்ளேன். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு உழியர், அரசியல் கட்சி பகுத்தறிவாளர்க்குப் பயிற்சி வகுப்பு ஏற் பாடு செய்யுங்கள். மாதந் தோறும் மாவட்டப் பகுத் தறிவாளர் கூட்டம் ஒன்று நடத்திடுங்கள். ஒவ்வொரு தோழரும் அவர் சார்பாக இருவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர ஆர்வம் கொள்ளுங்கள். கழக ஏடுகளை ஆங்காங்கே போய்ச் சேர வழி ஏற் படுத்துங்கள். புதிய உறுப்பினர்களாகச் சேர்த்து அமைப்பினை வலுப்படுத்துங்கள் என்ற கருத்துகளை மாநிலத் தலைவர் தம் உரையில் எடுத்துக்கூறி நிறைவு செய்தார்.

கருத்தினை வழி மொழிந்து செயலாற்றி, அமைப்பினை வலுவாக் கிடுவதாகத் திராவிடர் கழகக் காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்ட கழகத் தலவர் மு.முனியசாமி, செயலாளர் கோ-முருகன், மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன், கி.கோபால்சாமி, பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் த.செல்வராஜ் நன்றி கூறக் கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *