“’சாமி கும்பிடத்தான்’ கஞ்சா வளர்க்கிறேன்!” கைது செய்த காவல் துறையினரிடம் த.வெ.க. ஆதரவாளர் வினோத வாதம்!

சென்னை, மே 17- சென்னை புது வண்ணைப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்து வந்த இளைஞரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் தவெக ஆதரவாளர் என்பது தெரியவந்தது.

கைது நடவடிக்கையின் போது அந்த இளைஞர் காவல் துறையினரிடம், ”கஞ்சா வளர்த்தால் என்ன தப்பு? நான் சாமி கும்பிடத்தான் இதை வளர்த்து வருகிறேன்” என்று எதார்த்தமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத செயலை நியாயப்படுத்தி, அவர் எழுப்பிய இந்த விசித்திரமான கேள்வியைக் கேட்டு சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் செய்வதறியாது சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *