பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம்! பாம்பு கிடந்த மதிய உணவைச் சாப்பிட்ட 250 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு!

2 Min Read

பாட்னா, மே 9- பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரின் சஹர்சா பகுதியில் மஹிஷி வட்டாரத்திற்குட்பட்ட பாலுஹாவில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் ஒரு சிறிய பாம்பு கண்டெடுக்கப்பட்டது. நேற்று (8.5.2026) மதியம் பாம்பு கிடந்த உணவை உட்கொண்ட 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளால் அவதி அடைந்தனர். இது குறிப்பிட்ட பள்ளி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மஹிஷி சுகாதார மய்யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவர் களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான மாணவர்கள் சுகாதார மய்யத்திற்கு அழைத்து வரப்பட்டதால், அங்கு மக்கள் கூட்டம் திரண்டது.

பள்ளியில் கொடுக்கப்பட்ட அரிசி மற்றும் பருப்பு கலந்த உணவை சாப்பிட்டதும் சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைச்சுற்றல் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறி இருக்கிறார்கள். மேலும் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு பல குழந்தைகளின் உடல்நலம் மோசமடையத் தொடங்கியதாக தெரிகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கிராம மக்களும் பெற்றோர்களும் பள்ளியில் திரண்டு, உணவின் தரம் குன்றியிருந்ததைக் குறித்தும், இதில் சம்பந்தப்பட்ட அலட்சியத்தைக் குறித்தும் முழக்கமிட்டு, தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.பள்ளியில் பருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஒரு சிறிய பாம்பு குட்டி கிடந்ததாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் சார்பாக உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் தீபேஷ் குமார் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சஹர்சா சதர் மருத்துவமனை மற்றும் மகிஷி பொது சுகாதார மய்யத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது பெரும்பாலான மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *